தமிழ்நாடு

“9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றிபெற்று தி.மு.க சாதனை” : வெற்றி வேட்பாளர்களின் விபரங்கள்!

தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற 9 மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது.

“9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றிபெற்று தி.மு.க சாதனை” : வெற்றி வேட்பாளர்களின் விபரங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற 9 மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது. இதேபோல் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும் தி.மு.க கைப்பற்றி உள்ளது. தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க அமோக வெற்றிபெற்று சாதனை படைத்தது. இதையடுத்து நேற்று மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் பணியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

செங்கல்பட்டு

இதில் செங்கல்பட்டுமாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக செம்பருத்தி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வாழ்த்து தெரிவித்து அவரது இருக்கையில் அமர வைத்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டஊராட்சிக்குழு தலைவர் தேர்தல் மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட படப்பை மனோகரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட படப்பை மனோகரனுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக ஜெயச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் 28 இடங்களுக்கான மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் தேர்தலில் 27 இடங்களில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றியது. இதையடுத்து நேற்று நடைபெற்ற மாவட்ட ஊராட்சி குழு தலைவருக்கான தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ஜெயச்சந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட கவுன்சிலராக தி.மு.க.வைச் சேர்ந்த புவனேஸ்வரி பெருமாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

நெல்லை

நெல்லை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தி.மு.க.வைச் சேர்ந்த வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்ற ஜெகதீஷிற்கு மத்திய மாவட்ட செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தென்காசி

இதேபோல் தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி தேர்வு செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த மு.பாபு போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, தேர்தல் அலுவலர் குமாரவேல் பாண்டியன், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

திருப்பத்தூர்

இதேபோல் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்தசூரியகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டஊராட்சிக்குழு தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயந்தி திருமூர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளிலும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

banner

Related Stories

Related Stories