தமிழ்நாடு

“பூங்காக்களை பராமரிக்கவில்லை என ரூ.4.96 லட்சம் அபராதம் விதிப்பு” : சென்னையில் நிகழும் அதிரடி மாற்றங்கள்!

பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.4.96 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

“பூங்காக்களை பராமரிக்கவில்லை என ரூ.4.96 லட்சம் அபராதம் விதிப்பு” : சென்னையில் நிகழும் அதிரடி மாற்றங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் 704 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 540 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மேற்குறிப்பிட்ட பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனங்களுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் 31.07.2027 முதல் 16.10.2021 வரை ரூ.4.96 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பூங்காக்கள் பராமரிப்பு பணியில் தொடர்ந்து குறைபாடு மற்றும் தொய்வு கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

குடியிருப்பு நலச்சங்கங்கள் தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களை கண்காணித்து பூங்காக்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் குறித்து மண்டல அலுவலகம் அல்லது வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் அல்லது தலைமையிடத்தில் உள்ள 1913 என்ற தொலைபேசி உதவி எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories