திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த சென்னை மாதவரம் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தை போலிஸார் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த பையை சோதனையிட்டதில் அதில் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கல்லூரி மாணவரை கைது செய்தனர்.
பின்னர், போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட மாணவர் சென்னை முடிச்சூரை சேர்ந்த ரேவன் குமார் (21) என்பதும் அவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு பிசியோதெரபி பையிலும் மாணவர் என்பதும் அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலிஸார் வழக்குப்பதிவு செய்தவுடன் கடத்திவரப்பட்ட கஞ்சாவைகடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்து கல்லூரி மாணவரை சிறையில் அடைத்தனர்.