தமிழ்நாடு

செயல்பாட்டுக்கு வருகிறது Made In Tamilnadu: போயிங் உதிரி பாகங்களை தயாரிக்க சேலம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

போயிங் விமான நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை தயாரிக்க சேலத்தை சேர்ந்த ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

செயல்பாட்டுக்கு வருகிறது Made In Tamilnadu: போயிங் உதிரி பாகங்களை தயாரிக்க சேலம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

போயிங் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை சப்ளை செய்ய சேலத்தைச் சேர்ந்த ஏரோ ஸ்பேஸ் என்ற எம்.எஸ்.எம்.இ நிறுவனத்துடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏரோ ஸ்பேஸ் என்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரம், கடந்த 33 ஆண்டுகளாக தமிழகத்தில் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து தரும் தொழிலை செய்து வருகிறோம். அமெரிக்க நிறுவனமான போயிங் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறோம். போயிங் நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு (T-2) துணை நிறுவனமாக நாங்கள் செயல்பட்டு வந்தோம், தற்போது நேரடி ஒப்பந்தம் (T-1) கிடைத்துள்ளதாக கூறினார்.

சேலம் மற்றும் ஓசூரில் இதற்கான உற்பத்தியை தொடங்க இருப்பதாகவும், அங்கு போயிங் சிவில் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து வழங்க உள்ளதாக கூறினார்.

இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட்டு, 2022ம் ஆண்டு முதல் போயிங் நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை வழங்க உள்ளதாக கூறினார்.

தற்போது 400 பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், சேலம் மற்றும் ஓசூரில் உள்ள இதற்கான விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், இதனால் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். இதற்காக இரண்டு ஆண்டுகளில் ரூ.150 கோடி இதில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

Make in Tamil nadu ... made for the glob என்ற அடிப்படையில் முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க உற்பத்தியை துவங்க உள்ளதாகவும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய உதிரி பாகங்களை தயாரித்து போயிங் விமானத்திற்கு வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories