தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் A+ பிரிவு மற்றும் A பிரிவு ரவுடிகள் முதல் கொலைக் குற்றவாளிகள் வரை ஒவ்வொருவரின் வீடுகளிலும் சோதனை நடத்தி ஆயுதம் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்யுமாறு நேற்று டி.ஜி.பி சைலேந்திர பாபு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 32 காவல் மாவட்டங்கள் மற்றும் ஆறு காவல் ஆணையர் அலுவலகங்களில் இந்த ஸ்டாம்பிங் ஆபரேஷன் நேற்று இரவு தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடந்து உள்ளது. சென்னையில் உள்ள முக்கிய ரவுடிகளான ஜிங்கிலி முருகன், செல்வக்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று நேரடியாக போலிஸார் சோதனை நடத்தினர்.
இதில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்து உள்ளதாக சென்னை மாநகர போலிஸார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல்லில் 44, பெரம்பலூரில் 6, அரியலூரில் 36, கன்னியாகுமரியில் 39 என 500க்கும் ரவுடிகளை கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அதன்படி, 256 ஆயுதங்கள், 2 துப்பாக்கிகள், 560 ரவுடிகள் அதில் 8பேர் a+ குற்றவாளிகள் மற்றும் 16 முக்கிய குற்றவாளிகளை தமிழக காவல்துறை நேற்று நடத்திய சுவாமிக் ஆபரேஷன் மூலம் கைது செய்துள்ளனர்.