தமிழ்நாடு

பெற்ற குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்: அரியலூரில் அவலம்- குழந்தையை போலிஸார் மீட்டது எப்படி?

அரியலூரில் மூன்று மாத பெண் குழந்தையை ரூ. 1.80 லட்சத்துக்கு விற்பனை செய்த தாய், தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெற்ற குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்: அரியலூரில் அவலம்- குழந்தையை போலிஸார் மீட்டது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 3 மாத பெண் குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்பனை செய்த தாய், தந்தை உட்பட 5 பேரை போலிஸார் இன்று கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனா. இவர்களுக்கு சஞ்சனா, சாதனா, பிரியதர்ஷினி, சுபஸ்ரீ என நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நான்காவதாக பிறந்த சுபஸ்ரீ எனும் குழந்தைக்கு மூன்று மாதங்களே ஆன நிலையில் அந்தக் குழந்தையை ஈரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், செந்தில்குமார், மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த முத்தையன் ஆகியோர் மூலம் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தம்பதியருக்கு ரூ.1.80 லட்சத்துக்கு நேற்று விற்பனை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டபோது, குழந்தையை விற்பனை செய்தது உண்மை எனத் தெரியவந்தது.

இதனால் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் துரைமுருகன் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் குழந்தையை விற்ற தம்பதியர் குறித்து விசாரணை நடத்தியதில், குழந்தையை விற்றதை பெற்றோர் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து கோயம்புத்தூரில் இருந்த 3 மாதப் பெண் குழந்தையை போலிஸார் மீட்டனர். குழந்தை விற்பனையில் ஈடுபட்ட தாய், தந்தை உட்பட 5 பேரைக் கைது செய்த போலிஸார், இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories