தமிழ்நாடு

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளிலும் அநீதி; அதிமுக அரசால் 4 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட தமிழக மாணவர்கள்!

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் 2017ம் ஆண்டிலிருந்து மாநில மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஏ.கே.ராஜன் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளிலும் அநீதி; அதிமுக அரசால் 4 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட தமிழக மாணவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த 'நீட்' நுழைவுத் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு சிதைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில், மாநில மருத்துவ மாணவர்களின் சேர்க்கையும் 2017ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகக் குறைந்து வந்துள்ளது என நீட் தேர்வு தாக்கம் குறித்து ஏ.கே. ராஜன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே நேரம் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் பிற மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது என்பதையும் இந்த குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட் வருவதற்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் சேர்க்கை 2013ம் ஆண்டிலிருந்து 2016 வரை 100% என்று இருந்துள்ளது. ஆனால், நீட் நுழைவுத் தேர்வு வந்த பிறகு மருத்து மாணவர்களின் உயர்கல்வி படிப்பிற்கான சேர்க்கை கணிசமாகக் குறைந்து வந்துள்ளது. 100% இருந்த இந்த எண்ணிக்கை நான்கே ஆண்டுகளில் 34% சரிந்துள்ளது.

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளிலும் அநீதி; அதிமுக அரசால் 4 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட தமிழக மாணவர்கள்!

அதேவேளையில், தமிழ்நாட்டில் பிற மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2017ம் ஆண்டு 24% இருந்தது. தற்போது 2020 -2021 ம் ஆண்டில் 66% ஆக அதிகரித்துள்ளது.

அதிமுக ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகளில் உயர் கல்வி மருத்துவ படிப்புகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பது ஏ.கே. ராஜன் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மூலம் தெரியவந்துள்ளது.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வு குறித்து தனது பரிந்துரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories