தமிழ்நாடு

கொடநாடு தினேஷ் தற்கொலை... “போலிஸ் அறிக்கையில் எழுதியது என்னவென்றே தெரியாது” - தந்தை பரபரப்பு வாக்குமூலம்!

கொடநாடு கணினி பொறியாளர் தினேஷ் தற்கொலை குறித்து காவல்துறையினர் எழுதிய அறிக்கையில், காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி கையெழுத்து மட்டுமே போட்டதாக தினேஷின் தந்தை போஜன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொடநாடு தினேஷ் தற்கொலை... “போலிஸ் அறிக்கையில் எழுதியது என்னவென்றே தெரியாது” - தந்தை பரபரப்பு வாக்குமூலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொடநாடு கணினி பொறியாளர் தினேஷ் தற்கொலை குறித்து காவல்துறையினர் எழுதிய அறிக்கையில், காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி கையெழுத்து மட்டுமே போட்டதாக தினேஷின் தந்தை போஜன் மறுபுலன் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அங்கு பணிபுரிந்த கணினி பொறியாளர் தினேஷ்குமார் சில நாட்கள் மன உளைச்சலில் இருந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2017ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அப்போது காவல் ஆய்வாளராக இருந்த பாலசுந்தரம், கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த தினேஷ் கண்பார்வைக் கோளாறு காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக வழக்கை முடித்து வைத்தார்.

இந்நிலையில் தற்போது கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக மறுபுலன் விசாரணை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து நடைபெற்று வருகிறது.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையில் தினேஷ் தற்கொலையில் சந்தேகம் இருப்பதால் தற்கொலை வழக்கை சந்தேக மரணம் என மாற்றி மறு விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலிஸார் முறைப்படி கோத்தகிரி வட்டாட்சியர் சீனிவாசனிடம் முறைப்படி அனுமதி பெற்று தினேஷ் தற்கொலை குறித்த வழக்கை மறுபுலன் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அதன்படி இன்று காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை கீழ் கோத்தகிரி அருகே உள்ள கொங்கரை கிராமத்திலுள்ள தினேஷ் வீட்டில் அவரது சகோதரி ராதிகா, அவரது தாய் கண்ணகி ஆகியோரிடம் விசாரணை அதிகாரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையில் ,

சோலூர்மட்டம் காவல் ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது காவல்துறையினர் தினேஷ் தற்கொலை குறித்து பல்வேறு கேள்விகளை அவரது தந்தை போஜன் மற்றும் தாய் சகோதரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரது தந்தை போஜன் கூறிய வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகன் மன உளைச்சலில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது, ஆனால் காவல்துறையினர் எனது மகன் தினேஷ் தற்கொலை செய்துகொண்ட நிலையில், பிரேத பரிசோதனை மேற்கொள்ள என்னிடம் கையெழுத்தை மட்டும் பெற்றனர்.

தற்கொலை குறித்து விவரங்களை காவல்துறையினர் பதிவு செய்து கொண்டனர். அதில் காவல்துறையினர் என்ன எழுதினார்கள் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

இதனிடையே நாளை 22அம் தேதி, உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடநாடு குற்றச்செயலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த மனோஜ் சாமி மற்றும் சந்தோஷ் சாமி ஆகியோரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories