திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்ஜினி. இவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், கோகுல் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளார்.
இதையடுத்து கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். மேலும் கணவரைப் பரிந்து குழந்தையுடன் தனியாகக் கடந்த நான்கு மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது குழந்தைக்கு சஞ்ஜினி காதனி விழா நடத்தியுள்ளார். இந்த விழாவிற்கு வந்த உறவினர்கள் கணவர் எங்கே என கேட்டுள்ளனர். இதனால் விவாகரத்து குறித்த தகவல்களைத் தெரிவித்துள்ளார். இதற்கு உறவினர்கள் சிலர் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் சிலர் புறம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மருத்துவர் சஞ்ஜினி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றி இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து போலிஸார் வீட்டிற்கு சென்று அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் மருத்துவர் தற்கொலை குறித்து விசாரணை நடத்தியதில் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் விவகாரத்து கோரிய குறித்த விவரங்களை யாருக்கும் சொல்லாமல் மறைத்தால், காதனி விழாவின் போது கணவர் எங்கே என பலரும் கேட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.