தமிழ்நாடு

2வது மெகா தடுப்பூசி முகாம் தொடக்கம்.. இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்!

தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. மாநிலம் முழுவதும் 20,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2வது மெகா தடுப்பூசி முகாம் தொடக்கம்.. இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டில் இன்று தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் மெகா தடுப்பூசி மையங்கள் மூலம் 15 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஒருசில இடங்களில் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த செப்., 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு புதிய சாதனையை படைத்தது. குறிப்பாக சென்னையில் மட்டும் 1.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் இரண்டாவது முறையாகவும் சென்னையில் மூன்றாவது முறையாகவும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துதுள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மொத்தமாக 20,000 இடங்களில் நடைபெற உள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 1600 தடுப்பூசி முகாம்கள் செயலபடும். சென்னையை பொறுத்தவரை தடுப்பூசி முகாம் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

2வது மெகா தடுப்பூசி முகாம் தொடக்கம்.. இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்!

மேலும், காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த தடுப்பூசி முகாம்கள் மாலை 7 மணி வரையிலும் செயல்பட உள்ளது. தடுப்பூசி போடப்பட்ட பிறகு பொதுமக்களுக்கு ஏதேனும் பின் விளைவுகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தடுப்பூசி மையங்களுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணிந்திருக்க வேண்டும் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து தடுப்பூசி மையங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

மேலும் மாநில மாவட்ட, வட்டார அளவில் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது அலையை தவிர்க்கவும், கொரோனா நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் இந்த மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள முகாமில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திகொண்டனர். பாடல்கள் மூலமும் நேரடியாக மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேசுவது போலும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

banner

Related Stories

Related Stories