தமிழ்நாடு

சிக்கிய முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் - கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சிக்கிய முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் - கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார் வந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கே.சி.வீரமணிக்குச் சொந்தமான ஏலகிரி மலையில் உள்ள பங்களா மற்றும் அவருடைய மனைவிக்குச் சொந்தமான இடங்கள் ஆகியவற்றிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து கே.சி.வீரமணிக்கு நெருக்கமான திருப்பத்தூர் அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் நாட்றம்பள்ளி, முன்னாள் கவுன்சிலர் மலகொண்ட ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பல்வேறு பகுதியில் இருக்கும் 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோலார்பேட்டை சின்னகோடியூரில் உள்ள கே.சி.வீரமணி குடும்பத்தைச் சேர்ந்த பிடி மண்டியில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் ஜோலார்பேட்டையில் உள்ள அமைச்சரின் வீட்டின் முன்பு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடந்த நிலையில் தற்போது கே.சி.வீரமணி சோதனை வளையத்தில் சிக்கியுள்ளார்.

banner

Related Stories

Related Stories