தமிழ்நாடு

2 கட்டங்களாக வாக்குப்பதிவு.. அக்.12ல் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் அட்டவணையை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையர்!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

2 கட்டங்களாக வாக்குப்பதிவு.. அக்.12ல் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் அட்டவணையை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் சற்றுமுன்னர் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.

மாநில தேர்தல் ஆணையர் பேசுகையில், “தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.

9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 75 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்; கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம்” என அறிவித்தார்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வருமாறு:

வேட்பு மனு தாக்கல் : செப்., 15 - செப்., 22

வேட்பு மனு பரிசீலனை : செப்., 23

வேட்பு மனு வாபஸ் பெற கடைசி தேதி : செப்., 25

வாக்குப்பதிவு - முதற்கட்ட தேர்தல் : அக்., 6.

இரண்டாம் கட்ட தேர்தல் அக்., 9

வாக்கு எண்ணிக்கை : அக்டோபர் 12

banner

Related Stories

Related Stories