மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 12-வது நாளான நேற்றைய தினம் இந்தியாவுக்கு தித்திப்பு நிறைந்ததாக அமைந்தது. ஒரே நாளில் 2 தங்கம் உள்பட 4 பதக்கம் கிட்டியது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா தற்போது 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றுள்ளது.
இன்று நடைபெற்ற போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் ஹாங்காங் வீரர் மான் கையை 17-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வீழ்த்தினார்.
இந்த பதக்கங்கள் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. 1960 லிருந்து 2016 வரை இந்தியா வென்றிருந்த மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையே 12 தான். ஆனால், இந்த ஒரே பாராலிம்பிக்கிலட்டும் இதுவரை இந்தியா 19பதக்கங்களை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.