தமிழ்நாடு

“சமூக நீதி திட்டங்களில் புது வரலாறு படைக்கும் முதலமைச்சர்” : ஒரு கட்சியின் ஆட்சியல்ல.. கொள்கையின் ஆட்சி!

ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் சாமானிய மக்களுக்கும் பயன்படும் திட்டங்களை சமூக நீதியை முதன்மையாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது தி.மு.க அரசு.

“சமூக நீதி திட்டங்களில் புது வரலாறு படைக்கும் முதலமைச்சர்” : ஒரு கட்சியின் ஆட்சியல்ல.. கொள்கையின் ஆட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு அதிரடியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் சாமானிய மக்களுக்கும் பயன்படும் திட்டங்களை சமூக நீதியை முதன்மையாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது தி.மு.க அரசு.

அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்கள் பொதுமக்கள் மத்தியிலும், தமிழ்நாடு கடந்தும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ திட்டத்தை தொடங்கி வைத்தது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி பணி ஆணைகளை வழங்கியது என அசத்துகிறது இந்து சமய அறநிலையத்துறை.

மேலும், தமிழ் வளர்ச்சிக்கும் பல்வேறு நற்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கோயில்களில் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றோடு, திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழ் வழியில் படித்தோருக்கு தொழிற் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓ.பி.சிக்கு 27% இட ஒதுக்கீட்டை சட்டப் போராட்டங்களின் வாயிலாக வென்றது தி.மு.க.

இட ஒதுக்கீட்டுப் போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என நேற்று சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அயோத்திதாசரின் 175ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னையில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், வ.உ.சிதம்பரனார் மறைந்த நாள் தியாகத் திருநாளாக அறிவிக்கப்படும் என்றும், ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனார் வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபமும் புனரமைக்கப்பட்டு, அவ்விடங்களில் அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து பயனடையும் வகையில், ஒலி - ஒளி காட்சி அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் முன்மாதிரி அரசாக செயல்பட்டு வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசு. ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல், கொள்கையின் ஆட்சியாக தி.மு.க ஆட்சி செயல்படுவதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories