தமிழ்நாடு

குப்பையில் வீசப்பட்ட ரூ.90,000.. ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை 3 மணி நேரத்தில் மீட்ட போலிஸார் - நடந்தது என்ன?

தலையணைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.90,000 பணத்தை ஆட்டோவில் தவறவிட்ட மூதாட்டி மூன்று மணி நேரத்தில் கண்டுபிடித்த போலிஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

குப்பையில் வீசப்பட்ட ரூ.90,000.. ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை 3 மணி நேரத்தில் மீட்ட போலிஸார் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை மணலி புதுநகர் ஆண்டார்குப்பம் அய்யா கோவில் தெருவைச் சேர்ந்த 60 வயதுடைய சந்தா பீவி இவர் நேற்று இரவு மணலி புதுநகர் ஆண்டார் குப்பத்தில் இருந்து ஆட்டோவில் ஏறி திருவெற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே இறங்கியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து ரயில் மூலம் டெல்லிக்கு சென்று கொண்டிருந்தார் அப்பொழுது தான் வைத்திருந்த தலையணை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரூ.90,000 ஆயிரம் பணத்தை தலையணையில் மறைத்து வைத்து எடுத்து வந்த நிலையில், ஆட்டோவில் தவற விட்டது தெரியவந்தது.

இது குறித்து சந்தா தனது மகன் பப்புவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் எண்ணூர் காவல் நிலையத்தில் பப்பு( எ) முகமது வசிம் புகார் அளித்தார். புகாரையடுத்து எண்ணூர் போலிஸார் மணலிபுதுநகர் ஆண்டார் குப்பம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமிரா பதிவுகளை வைத்து ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரித்தனர்.

அந்த தலையனையை குப்பை என நினைத்து ஆண்டார்குப்பம் அருகே உள்ள ஓடை குப்பையில் தூக்கி வீசியதாக ஆட்டோ ஓட்டுனர் கூறியுள்ளார். இதனையடுத்து தூக்கி எறிந்த இடத்திற்குச் சென்று போலிஸார் தலையணையை எடுத்து பிரித்து பார்த்து அதில், 90 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை கண்டு போலிஸார் உதவி ஆணையரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பின் எண்ணூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுதாகர் ரூ.90,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories