தமிழ்நாடு சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா சுங்கச்சாவடிகளை நீக்ககோரி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். அந்த தீர்மானத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வவேலு பதில் அளித்து பேசினார், அப்போது, “தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்கவேண்டும். ஆனால், 48 சுங்கச்சாவடிகள் இருக்கிறது.
ஒன்றிய அரசின் சட்டத்திலேயே குறிப்பிட்ட விதிமுறைகளை மீறி தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் செயல்படுகிறது. அதுமட்டுமல்லாது, குத்தகை காலம் முடிந்த பிறகு செயல்படுகிறது. விரைவில் அவற்றை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டும்.
கேரளாவைக் காட்டிலும் தமிழ்நாட்டில் கூடுதாலக் சுங்கச்சாவடிகள் உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதை ஒன்றிய அரசு அமைச்சர் நிதின் கட்காரி இடம் வலியுறுத்தி அதை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.