தமிழ்நாடு

“இலங்கைத் தமிழர்கள் அனாதைகள் அல்ல, அவர்களுக்கு துணையாக நாம் இருக்கிறோம்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

இனி இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் என்பது இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

“இலங்கைத் தமிழர்கள் அனாதைகள் அல்ல, அவர்களுக்கு துணையாக நாம் இருக்கிறோம்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வோண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் தி.மு.க உறுப்பினர் பூண்டி கலைவாணன், இலங்கை அதிகாரிகள் முகாம்களில் உள்ள தமிழர்கள் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் நேற்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதைப் பாராட்டிப் பேசினார்.

இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உறுப்பினர் பேசியது போலவே நேற்று நானும் இலங்கைத் தமிழர்கள் அகதிகள் முகாம் என்று குறிப்பிட்டேன். இனி இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் என்பது இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும். அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் அனாதைகள் அல்ல. அவர்களுக்காக நாம் இருக்கிறோம். இலங்கை தமிழர்கள் நலனின் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும்" என தெரிவித்தார்.

நேற்றைய சட்டப்பேரவையில், இலங்கைத் தமிழர் வாழவில் ஒளியேற்றும் விதமாக 110 விதியின் கீழ் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இன்று இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம் இனி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், இலங்கை தமிழர்களும் வரவேற்றுப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories