தமிழ்நாடு

“வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும்; முழுமனதோடு வரவேற்கிறோம்” : பேரவையில் ஓ.பி.எஸ் பேச்சு!

கலைஞருக்கு நினைவிடம் கட்டும் அறிவிப்பை அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்பதாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

“வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும்; முழுமனதோடு வரவேற்கிறோம்” : பேரவையில் ஓ.பி.எஸ் பேச்சு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞரின் அரும்பணிகளைப் போற்றும் விதமாக காமராஜர் சாலை அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞருக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை வரவேற்றுப் பேசிய சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், “கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம்.

கலைஞர் வசனத்தில் அனல் பறக்கும், பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது. என் தந்தை தீவிரமான கலைஞரின் பக்தர்; அவருடைய பெட்டியில் மனோகரா, பராசக்தி கதைகள் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் எடுத்துப் படித்துள்ளோம்.

கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories