தமிழ்நாடு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு... அச்சத்தில் மக்கள் - நில நடுக்கத்திற்கு காரணம் என்ன?

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று நில அதிர்வு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு... அச்சத்தில் மக்கள் - நில நடுக்கத்திற்கு காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை - ஆந்திராவை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காக்கிநாடாவிலிருந்து 296 கி.மீ கிழக்கு திசையில் வங்கக்கடலில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. வங்கக் கடலில் சரியாக 12.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 320 கி.மீ. தொலைவில் வங்கக்கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நடுக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சென்னையில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

அதுமட்டுல்லாது, நிலப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தால் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னையில் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், தியாகராயர் நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதிகளின் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக மீனவர்கள் தற்போதைக்கு வங்கக்கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னைக்கு மிக அருகில் நிலநடுக்கம் மையம் கொண்டிருப்பது அண்மைக் காலத்தில் இதுவே முதன்முறை என்று நிபுணர்கள் கூறுயுள்ளனர்.

banner

Related Stories

Related Stories