தமிழ்நாடு

உஷார் மக்களே... "தேர்வு எழுதணும்.. ஒரு நம்பர் மாறிடுச்சு என பேசினால் நம்பாதீங்க" : போலிஸ் எச்சரிக்கை!

ஒரு மாதிரியாக இருக்கும் செல்போன் எண்களை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணமோடியில் ஈடுபட்டு வருவதாக போலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உஷார் மக்களே... "தேர்வு எழுதணும்.. ஒரு நம்பர் மாறிடுச்சு என பேசினால் நம்பாதீங்க" : போலிஸ் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி, பண மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், செல்போன் எண்களைப் பயன்படுத்தி நூதன மோசடி நடைபெற்று வருவதாகப் பொதுமக்களுக்கு போலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபகாலமாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஒரே மாதிரியான செல்போன் எண்களை (அதாவது ஒரே ஒரு எண் மட்டும் மாறியிருக்கும்). தேர்வு செய்து மர்ம நபர்கள், "அரசு தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தேன். ஒரு எண் மட்டும் தவறாக கொடுத்து விட்டேன். உங்கள் எண்ணுக்கு வரும் ஓடிடி நம்பரைச் சொன்னால்தான் நான் தேர்வு எழுத முடியும், என் வாழ்க்கையே உங்கள் கையில் தான் இருக்கிறது" எனக் கூறுவார்கள்.

இதை நம்பி ஓடிடி எண்ணைத் தெரிவித்தால், நமது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஆன்லைன் மூலம் நூதனமாகக் கொள்ளையடித்து வருகிறார்கள். எனவே உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிடி எண்ணை யாருக்கும் பகிர கூடாது.

மேலும் வங்கியிலிருந்து வருவதுபோல், லிங்க் எதுவும் செல்போனுக்கு வந்தால் அதையும் கிளிக் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு சைபர் கிரைம் போலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories