தமிழ்நாடு

அரசு பேருந்து நடத்துனர் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை : காரணம் என்ன? - போலிஸ் விசாரணை!

மதுரையில் அரசு பேருந்து நடத்துனர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள

அரசு பேருந்து நடத்துனர் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை : காரணம் என்ன? - போலிஸ் விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை மாவட்டம், மேலூர் அடுத்த பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லச்சாமி. இவர் அரசு பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பூங்குடிச்சாமி என்பவருக்கும் காலி வீட்டுமனை தொடர்பான இடப் பிரச்சனை இருந்துவந்துள்ளது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று செல்லச்சாமி பணியை முடித்து விட்டு இரவு உணவு வாங்குவதற்கான திருப்புவனம் வாரச்சந்தைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பூங்குடிச்சாமிக்கும் இவருக்கும் மீண்டும் காலி வீட்டுமனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆவேசமடைந்த பூங்குடிச்சாமி அங்கிருந்து உருட்டுக்கட்டையை எடுத்து செல்லசாமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். பிறகு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த செல்லசாமியை மீட்ட அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், செல்லசாமி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருப்புவனப் போலிஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பூங்குடிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories