தமிழ்நாடு

கொடநாடு கொலை - கொள்ளை என்றதும் இ.பி.எஸ்-க்கு ஏன் இந்தக் குலை நடுக்கம்? : அவிழும் மர்ம முடிச்சுகள் !

கொடநாடு கொலை - கொள்ளை என்றதும் இ.பி.எஸ் அச்சப்படுகிறார், ஆவேசம் கொள்கிறார், ஆர்ப்பரிக்கிறார்.

கொடநாடு கொலை - கொள்ளை என்றதும் இ.பி.எஸ்-க்கு ஏன் இந்தக் குலை நடுக்கம்? : அவிழும் மர்ம முடிச்சுகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதல்வர் மு.க.ஸ்டாலின், கொடநாடு சம்பவம் குறித்து, பேரவையில் கொடுத்த தர்க்க ரீதியிலான - அறிவுப்பூர்வமான விளக்கத்தை ஏற்க அல்லது பொறுமையாகக் கேட்க இ.பி.எஸ் நெஞ்சு இடம் தரவில்லை. அவரும், அவருடைய கட்சியினரும் பதற்றத்தில், கூச்சல் - குழப்பம் - வெளிநடப்பு - தர்ணா என்று கேலிக்கூத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், சமயோஜிதமாக, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பதை நிரூபித்துவிட்டு வெளிநடப்பு செய்திருக்கிறார்கள் என்றும்; “மடியிலே கனம் இருந்தால்தான் வழியிலே பயம் இருக்கும்” என்றும்; விளக்கம் அளித்து, இ.பி.எஸ். கம்பெனியினர் மனதில் ஒளிந்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறார்.

“குற்றம் உள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும்?” என்பதனாலேதான், குழப்பம் - கூச்சல் - ஆர்ப்பாட்டம் எல்லாம்! இவற்றின் மூலம் “கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல” என்பதற்கொப்ப, நாட்டுமக்கள் மத்தியில் ஏற்கனவே நிலவி வந்த சந்தேகம் மேலும் வலுப்பட்டு உறுதியாகி வருகிறது.

தந்தை தனக்குப் பரிசாகத் தந்த மோதிரத்தை அக்பர் ஒரு நாள் தொலைத்து விட்டார். தனது நீதிமன்றத்தில் பீர்பாலிடம், அக்பர் மோதிரம் தொலைந்ததைச் சொல்லி, கண்டுபிடிக்க வேண்டும் எனக்கட்டளை இட்டார். அதற்கு பீர்பால், “அந்த மோதிரத்தைத் திருடியவர் இங்கே தான் இருக்கிறார்; திருடியவரின் தாடியில் நிச்சயம் வைக்கோல் ஒட்டிக் கொண்டிருக்கும்” என்றார். மோதிரத் திருடர், வைக்கோல் இருக்கிறதா என்று தனது தாடியைத் தடவிப் பார்த்தார்.

கடைசியில் அவரிடம் இருந்தே மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது. அக்பரின் அரண்மனையில் தாடியைத் தடவிப் பார்த்து, கையும் களவுமாகப் பிடிபட்டவரைப் போல, கொடநாடு கொலை - கொள்ளை என்றதும் இ.பி.எஸ் அச்சப்படுகிறார், ஆவேசம் கொள்கிறார், ஆர்ப்பரிக்கிறார். மர்ம முடிச்சு, சட்டத்தின் கரங்களால் அவிழ்க்கப்படும் நேரம் வந்து விட்டது. அந்த மர்ம மனிதர் யார் என்பது மக்களுக்குத் தெரிந்துவிடும்!

banner

Related Stories

Related Stories