தமிழ்நாடு

நீதிமன்றத்தில் விசிக வைத்த கோரிக்கை.. நடிகை மீரா மிதுன் மற்றும் அபிஷேக் ஜாமின் மனுவை ஒத்திவைத்த நீதிபதி!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமின் மனுவை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் விசிக வைத்த கோரிக்கை.. நடிகை மீரா மிதுன் மற்றும் அபிஷேக் ஜாமின் மனுவை ஒத்திவைத்த நீதிபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.  கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ம் தேதி கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பருக்கும் ஜாமின் வழங்க கூடாது என புகார்தாரரான வி.சி.க துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தரப்பில் வழக்கறிஞர் காசி முறையீடு செய்தார்.

மேலும், இதுதொடர்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

banner

Related Stories

Related Stories