தமிழ்நாடு

”எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - இந்து என் ராம் புகழாரம்!

தென் மாநிலங்களில் தமிழ்நாட்டை ஒரு முன்மாதிரி மாநிலமாக கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன். இந்த அரசுக்கு நான் முன்னரே சொன்னபடி நூற்றுக்கு நூறு மார்க் கொடுக்கலாம் என இந்து என்.ராம் புகழ்பாடியுள்ளார்

”எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - இந்து என் ராம் புகழாரம்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழக அரசின் நூறு நாள் சாதனைகளைப் புகழ்ந்து இந்து என்.ராம் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இது ஒரு சிறந்த ஆரம்பம் என்று நான் நினைக்கிறேன். கிரிக்கெட்டில் வீரேந்திர ஷேவாக் ஆடுவதை போல ஒரு நேர்மையாக மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட்டார்கள் என்று சொல்லலாம். எங்கே கேட்டாலும் மக்கள் சொல்கிறார்கள். எங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. எதிர்பார்ப்பும் உயர்வாக வந்துவிட்டது. அது எதனால் வந்தது என்றால், மக்கள் பிரச்சினையில் இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றினார்கள். சரியான நிலையில் திட்டமிட்டு பணியாற்றினார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி மிகுந்த நெருக்கடியான காலத்தில் அமைந்தாலும் இரண்டாவது அலையை அவர்கள் நிதானமாக விஞ்ஞான ரீதியாக செயல்பட்டார்கள் என்று சொல்ல முடியும். கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்க ஒவ்வோரு மாவட்டத்திற்கும் இரண்டு அமைச்சர்களை அனுப்பி கண்கானிக்க வைத்தார்கள். உங்கள் பொறுப்பில் உள்ள மாவட்டங்களில் நோய்தொற்றை குறைத்து, உயிரிழப்பை குறைக்க வேண்டும். உண்மையான நிலவரத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று செயல்பட்டார்கள். கொரோனா தொற்று குறித்து உண்மையை சொன்னார்கள். அது மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டியது.

மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டம் மிகவும் அற்புதமான திட்டம். இத்திட்டம் கேரளாவில் ஓரளவுக்கு இருந்தது. தமிழ்நாட்டில உட்கட்டமைப்பு இருந்தது. எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு மாவட்டத்திற்கு இருக்கக் கூடிய சுகாதார அடிப்படை வசதிகள் வேறு எங்கும் கிடையாது. மருத்துவக் கல்லூரி ஒவ்வொரு மாவட்டத்திலும் வந்துவிட்டது. அதை எல்லாம் மேம்படுத்த வேண்டும். இப்போது கூட ஒரு குழந்தைகள் நல வார்டை ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆரம்பித்தார்கள். இதில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை தரம், சுகாதாரம், ஆரோக்கியம் என்ற ஒரு உணர்வோடு வந்து இருக்கிற ஒரு அரசாங்கமாக தி.மு.க. அரசாங்கம் திகழ்கிறது.

இதுதான் முதல் சவால். மோதல் போக்கு எங்கும் இல்லை. கொள்கையை ஆரம்பமாக வைத்திருக்கிறார்கள். தி.மு.க. அடிப்படை கொள்கையை கோரிக்கையாக வைத்து மாநில உரிமைக்காக போராடினார்கள். மத்திய அரசும், தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இருக்கிறது. உதாரணமாக தடுப்பூசி தேவை என்றவுடன் கொடுக்கிறது. ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் இந்து சமய அறநிலையத் துறையை குறித்து அவதூறுகள் எல்லாம் இருந்தது. இப்போதெல்லாம் கோயில் நிலங்கள் எல்லாம் பராமரித்து வருகின்றது. யாரெல்லாம் கோயில் நிலங்களை வைத்திருந்தார்களோ அவர்களிடம் இருந்து நிலங்களை மீட்டு கொண்டு வந்திருக்கிறார்கள். கலைஞர் அவர்கள் நல்ல நூலகங்களை உருவாக்கி தந்துள்ளார். அதையெல்லாம் நிறைவு செய்யவேண்டும். இன்னும் நிறைய பணிகள் இருக்கிறது. அதை இந்த அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.

தென் மாநிலங்களில் தமிழ்நாட்டை ஒரு முன்மாதிரி மாநிலமாக கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன். இந்த அரசுக்கு நான் முன்னரே சொன்னபடி நூற்றுக்கு நூறு மார்க் கொடுக்கலாம். சில ஏதாவது குறைகள் ஆங்காங்கே இருக்கலாம். ஆனால் என் கண்ணில் படவில்லை. முக்கியமாக கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்கவும் சிறந்த நிர்வாகத்தை வழங்கவும் உயிரிழப்பை குறைக்கவும் நோய்த் தொற்றிலிருந்து மக்களை காக்கவும் இந்த அரசு பாடுபடுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசோடு தொடர்பு கொண்டு தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாத நிலையை முதல்வர் அவர்கள் செய்திருக்கிறார்கள்.

இடையில் ஒன்றிய அரசு கூட தடுப்பூசி வழங்குவதில் தாமதப்படுத்தியது. உடனடியாக தடுப்பூசி எளிதில் கிடைக்க ஒன்றிய அரசின் அமைச்சர்களோடும், பிரதமரோடும் பேசி சுலபமாக கிடைக்க வழிவகை கண்டார். இந்த அரசு சரியான முறையில் சிறந்த நிர்வாகத்தோடு நடந்து கொண்டிருக்கிறது. இந்த அரசை போல வேற எந்த அரசும் செயல்பட்டு இருக்க முடியாது என்று நான் கருதுகிறேன். எதிர்பார்ப்புகளுக்கு மேலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார்.

இவ்வாறு ‘இந்து’எம்.ராம் பேட்டியளித்தார்.

banner

Related Stories

Related Stories