தமிழ்நாடு

“சரக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்து பந்தா காட்டிய வேலுமணி கோஷ்டி” : அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு!

கோவை விமானநிலையத்தில் அதிக கூட்டத்தை சேர்த்த அ.தி.மு.க எம்.எல்.ஏ வேலுமணி உள்ளிட்ட 50 பேர் மீது நோய் பரவல் தடுப்பு சட்டத்தின்படி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

“சரக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்து பந்தா காட்டிய வேலுமணி கோஷ்டி” : அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அ.தி.மு.க ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவருக்குச் சொந்தமான 60 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், அரசு ஒப்பந்தங்களைத் தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை விமானநிலையத்தில் அதிக கூட்டத்தை கூட்டிதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ வேலுமணி உள்ளிட்ட 50 பேர் மீது நோய் பரவல் தடுப்பு சட்டத்தின்படி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழலில் சிக்கிய வேலுமணி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்றைய தினம் கோவை சென்றுள்ளார்.

“சரக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்து பந்தா காட்டிய வேலுமணி கோஷ்டி” : அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு!

அப்போது வேலுமணியை வரவேற்கும் விதமாக ஏராளமான அ.தி.மு.கவினர் ஊரடங்கை மீறி கூடினர். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் எஸ்பி.வேலுமணி, கேஆர்.ஜெயராமன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் மீது நோய் பரவல் சட்டத்தின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், சரக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்தது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியதால், 2 வது அலையில் ஏராளமான உயிர்களை இழந்த நிலையில், தற்போது, அரசின் உத்தரவை மீறி அ.தி.மு.க நடந்துகொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories