தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜேட் 2021-22: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம் இதோ!

தமிழ்நாடு பட்ஜேட் 2021-22: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் மற்றும் 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.

சட்டமன்ற வரலாற்றில் கலைவாணர் அரங்கில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இயற்றலும் ஈட்டலும் என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரை தொடங்கியது.

இந்த பட்ஜெட் தாக்கலின் போது தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த விவரம் பின்வருமாறு:-

தமிழ் வளர்ச்சித் துறை - ரூ.80.26 கோடி

தொல்லியல் துறை - ரூ.29.43 கோடி

காவல் துறை - ரூ.8,930.29 கோடி

தீயணைப்புத் துறை - ரூ.405.13 கோடி

நீதித் துறை - ரூ.1,713.30 கோடி

மீன் வளத்துறை - ரூ.1,149.79 கோடி

நெடுஞ்சாலைத் துறை - ரூ.17,899.17 கோடி

உயர்கல்வித் துறை - ரூ.5,369.09 கோடி

மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை - ரூ.18,933.20 கோடி

சுற்றுலாத் துறை - ரூ.187.59 கோடி

பள்ளிக் கல்வித்துறை - ரூ.32,599 கோடி

நீர் பாசனத் திட்டங்கள் - ரூ.6,607.17 கோடி

குடிசை மாற்று வாரியம் - ரூ.3,954.44 கோடி

பேரிடர் மேலாண்மை - ரூ.1,360 கோடி

மகப்பேறு நிதியுதவி - ரூ.959.20 கோடி

சாலை பாதுகாப்பு - ரூ.500 கோடி

ஸ்மார்ட் சிட்டி திட்டம் - ரூ.2,350 கோடி

மதிய உணவுத் திட்டம் - ரூ.1,725 கோடி

மகளிர் சுய உதவிக்குழு கடன் உறுதி செய்ய - ரூ.20,000 கோடி

சுற்றுச்சூழல் துறை - ரூ.500 கோடி

ஜல் ஜீவன் இயக்க மூலம் வீட்டு குடிநீர் இணைப்பு - ரூ.2,000 கோடி

கொரோனா நிவாரணத் தொகுப்பு - ரூ.9370.11 கோடி

கலைஞர் நமக்கு நாமே திட்டம் - ரூ.100 கோடி

கலைஞர் நகர்புற மேம்பாடு - ரூ.1,000 கோடி

banner

Related Stories

Related Stories