தமிழ்நாடு

திருட்டு மொபைலை விற்று பங்கு பிரித்த ஜெயில் வார்டன்; சென்னையில் சிக்கிய மூவர்!

திருடனிடம் மொபைல் போன்களை திருட சொல்லி அதனை பர்மா பஜாரில் விற்றுவந்த சிறைக்காவலர் உட்பட 3 பேர் கைது.

ரமேஷ், கார்த்திக், சிபி
ரமேஷ், கார்த்திக், சிபி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் தொடர் மொபைல் திருடனான சிபி என்பவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் காவல்துறையைச் சேர்ந்தவரே திருடனுக்கு உடைந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

விசாரணையில் சிறையில் இருந்தபோது ஜெயில் வார்டனாக பணிபுரிந்து வரும் சிறை காவலர் ரமேஷ் என்பவர் மொபைல் போன்களை திருடி தன்னிடம் விற்குமாறு கூறியதாகவும் அதன்பேரில் சிபி மொபைல் போனை திருடி சிறை காவலரான ரமேஷிடம் கொடுத்து வந்துள்ளார்.

அவ்வாறு திருடப்பட்ட செல்போன்களை சிறைக் காவலர் ரமேஷ் பர்மா பஜாரில் திருட்டு மொபைலை வாங்கும் கார்த்திக் என்பவரிடம் அதனை விற்று பாதி பணத்தை தான் எடுத்துக்கொண்டும் மீதி பணத்தை மொபைல் திருடனான சிபிக்கும் கொடுத்து வந்துள்ளார்.

இந்த தகவலை அடிப்படையாக கொண்டு மொபைல் திருடன் சிபி சிறைக்காவலர் ரமேஷ் மற்றும் பர்மா பஜாரைச் சேர்ந்த திருட்டு மொபைலை வாங்கும் கார்த்தி ஆகியோரை கைது செய்த அமைந்தகரை போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories