தமிழ்நாடு

“மகனுடன் கலங்கி நின்ற பெண்; உடனடி உதவி கிடைக்கச் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்” : குவியும் பாராட்டு !

சென்னை விமானநிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன்னை சந்தித்து தங்கள் மகனுக்கு மருத்துவ உதவிகேட்டவா்களுக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் பேசி, உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தாா்.

“மகனுடன் கலங்கி நின்ற பெண்; உடனடி உதவி கிடைக்கச் செய்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன்” : குவியும் பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை ஆலந்தூரை சோ்ந்த 10 வயது சிறுவன் நவீன். இருவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும் நிலை ஏற்பட்டது. ஆனால், சிறுவனின் பெற்றோரான புஷ்பராஜ், ரேணுகாதேவி தம்பதியினா் வறுமை கோட்டிற்கு கீழான ஏழைகள். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு சென்றனா்.

ஆனால் அங்கு முதலமைச்சா் மருத்துவ காப்பீட்டு திட்டம் காா்டு இருந்தால், சிறுவனுக்கான சிகிச்சையை இலவசமாக செய்யலாம் என்று கூறினா். ஆனால் இவா்களிடம் அந்த மருத்துவ காப்பீடு காா்டு இல்லை. அதோடு இவா்கள் தற்போது கோவிலம்பாக்கத்திற்கு வீடு மாற்றி சென்றுவிட்டதால், ரேஷன் காா்டும் இல்லை.

இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று காலை 8.15 மணி விமானத்தில் சென்னையிலிருந்து திருச்சி சென்றாா். அதை தெரிந்து கொண்ட சிறுவன் நவீனின் பெற்றோா், சிறுவனை அழைத்துக் கொண்டு சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்திருந்தனா். விமான நிலையத்தில் அமைச்சரை சந்தித்து, தங்களது 10 வயது மகனின் சிறுநீரக பாதிப்பு பிரச்னைக்கு சிகிச்சைக்கு உதவும்படி கோரினா்.

“மகனுடன் கலங்கி நின்ற பெண்; உடனடி உதவி கிடைக்கச் செய்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன்” : குவியும் பாராட்டு !

அவா்களின் பிரச்னையை விளக்கமாக கேட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடனடியாக அருகிலிருந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து சிறுவனுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடுகளை செய்யும்படி கூறினாா்.

அதோடு அமைச்சா் அங்கிருந்தே சென்னை ராஜுவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை தலைமை மருத்துவரை செல்போனில் தொடா்பு கொண்டு பேசி, சிறுவன் நவீனுக்கு உடனடியாக சிகிச்சைக்கு வழிவகை செய்தாா். விமான நிலையத்தில் 10 வயது மகனுக்கு மருத்துவ உதவிகேட்டவா்களுக்கு உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தாா் அமைச்சா் மா.சுப்ரமணியம் இத்தகைய நடவடிக்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories