தமிழ்நாடு

50 பைசாதான் ஒன்றிய அரசு கொடுக்கிறது; Zero வரியால் என்ன பயன்? முக்கிய விவரங்களை வெளியிட்ட அமைச்சர் PTR!

50 பைசாதான் ஒன்றிய அரசு கொடுக்கிறது; Zero வரியால் என்ன பயன்? முக்கிய விவரங்களை வெளியிட்ட அமைச்சர் PTR!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாநில அரசால் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிர்வாக மேலான்மை திறனற்ற அதிமுக ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக வீணாக செலவிட்டது குறித்தும் அரசுக்கு ஏற்படுத்தியுள்ள கடன் சுமை குறித்தும் விரிவாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஒன்றிய பாஜக அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதி வருவாயை பெற முடியும் என்றெல்லாம் வித்தை காட்டியவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை கேட்டுப் பெறாததால் 33 சதவிகிதம் நிதி வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரி மற்றும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையில் மாநிலத்துக்கு சேர வேண்டியதையும் அதிமுகவினர் கேட்டு பெறவில்லை. இதனால் வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.

சரியாக திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடி வந்தால் சராசரி மாநிலத்தை விட தமிழ்நாடு அதிகம் பாதிக்கும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இதனிடையே, ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 12 ரூபாயில் இருந்து 32 ஆக உயர்த்தியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. ஆனால் அவ்வாறு பெறப்படும் வரி வருவாயில் ரூ.31.50-ஐ ஒன்றிய அரசே எடுத்துக்கொண்டு எஞ்சிய 50 பைசாவை மட்டுமே மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கிறது.

சரியான வரியை சரியான நபர்களிடம் இருந்து ஈட்டுவதுதான் அரசாங்கத்தின் திறமை. வளர்ந்த நாடுகளில் மட்டுமே வரியில்லா பட்ஜெட் முறை சாத்தியமாகும். ஜீரோ வரியால் பயனடைவது பணக்காரர்கள் மட்டுமே. ஏழைகள் அல்ல. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்திகு ஏற்ப வரியை வசூலிக்காமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரானது.

திமுக ஆட்சியின் போது ஒட்டுமொத்த உற்பத்தியில் 11.41% ஆக இருந்த வருவாய் கடந்த அதிமுக ஆட்சியில் 3.8% ஆக சரிந்திருக்கிறது. அந்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் பாதியளவில் கூட வரி வருவாய் இல்லை. 2020-21ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61.320 கோடியாக உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories