நிறுத்தப்பட்ட ரயில்வே பயண சலுகைகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டம் தற்போது இல்லை என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர், இந்திய ரயில்வே துறை 51 பிரிவின் கீழ் பொதுமக்களுக்கு கட்டண சலுகையினை வழங்கி வருகிறது.
இந்த சலுகைகளினால் ஆசிரியர்கள், விருது பெற்றவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற பல தரப்பினர் பலன் அடைந்து வருகின்றனர். கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
இதனால் மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், மாணவர்கள் உள்ளிட்ட அவசியமான 11 பிரிவினருக்கு மட்டும் கட்டண சலுகை அனுமதிக்கப்பட்டது. நிறுத்தப்பட்ட இதர பிரிவினருக்கான பயண சலுகைகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டம் தற்போது இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாடு முழுவதும் ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் வை-பை வசதி திட்டத்துக்கான செலவு கூடுதலாக இருப்பதால் அதனை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.