தமிழ்நாடு

திருச்சியை கலக்கும் ‘சுதேசி ஆட்டோ’... கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சவால் விடும் ஆட்டோக்காரர்கள்!

ஐநூறுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ‘சுதேசி’ செயலி மூலம் இணைந்துள்ளனர்.

திருச்சியை கலக்கும் ‘சுதேசி ஆட்டோ’... கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சவால் விடும் ஆட்டோக்காரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கார்ப்பரேட் வாடகை வாகன நிறுவனங்களால் பெரும் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளாகியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், தங்களின் வருமானத்தை தக்கவைக்கும் நோக்கத்தோடு ‘சுதேசி’ ஆட்டோ செயலி மூலம் ஒருங்கிணைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சுமார் 16,000 ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஐநூறுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ‘சுதேசி’ செயலி மூலம் இணைந்துள்ளனர்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுதந்திரமாக செயல்படும் வகையில், திருச்சியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து சுதேசி செயலியை உருவாக்கியுள்ளனர்.

அரசு விதிப்படி , 1.8 கிலோமீட்டருக்கு 20 ரூபாயும், அதற்கு மேல் கூடுதலாகும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 12 ரூபாயும் என பயணக் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

ஓராண்டுக்கு மேலாக சுதேசி செயலியுடன் இணைந்து செயல்படும் ஆட்டோக்களில் வசூலிக்கப்படும் கட்டணமும், சேவையும் திருச்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை கமிஷனாக இழந்து வந்த நிலையில், சுதேசி செயலி மூலம் அதிக வருமானம் ஈட்டுவருவதாகத் தெரிவித்துள்ளனர்.

வெற்றிகரமான இந்தத் திட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவு செய்ய உள்ளதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories