உலகம் முழுவதுமே இணையவாசிகள் கைகளுக்கு கிடைத்த புது வரவு ‘கிளப் ஹவுஸ்’. இந்த புதிய சமூக வலைத்தளத்தை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் பயனார்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகமானது. அதன்பிறகு நெட்டிசன்கள் மத்தியில் இப்போது இது குறித்துதான் வைரல் டாக்தான் அதிகம் நடந்து வருகிறது.
கடந்த 2020 ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த செயலி அறிமுகமானலும் இந்தியாவிற்கு தற்போது சாமதமாகி வந்து பட்டையைக் கிளப்பிக்கொண்டிகிறது. வழக்கமாக சமூக வலைதளங்கள் என்றால், வீடியோ, போட்டோ மற்றும் எழுத்து பதிவிகள் என கலவரமாகவும் கலர் புல்லாகவும் இருக்கும். ஆனால் இந்த நடைமுறைகளை மாற்றி அமைக்கும் படி வந்துள்ளது கிளப் ஹவுஸ்.
குறிப்பாக சுயவிவரங்களை ப்ரொபைலில் மட்டுமே வைத்துக்கொள்ளும் வசதியைக் கொண்டுள்ள கிளப் ஹவுஸில், ஆடியோவை மட்டுமே பகிர முடியும். அதுவும் லைவ் ஆடியோ மட்டும் தான். கூடிபேசும் அரட்டை அரங்கம் என்றுக்கூட சொல்லலாம். இதுவரை இல்லாத வகையில் ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் பேர் பேசும் வசதியைக் கொடுத்துள்ளது கிளப் ஹவுஸில். பல்வேறு தலைப்புகளை புதிதாக உருவாக்கி அரட்டை அளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
சமீபத்தில் ட்விட்டரின் ‘ஸ்பேசஸ்’ உரையாடல் வசதி டிரெண்ட் ஆன நிலையில், அதற்குப்போட்டியாக கிளப் ஹவுஸ் நிற்கிறது. இருப்பிடத்தை வைத்துப் பொதுவான விருப்பங்கள் கொண்டவர்களை இணைக்கும் ‘ஹைலைட்’ என்னும் செயலியை வடிவமைத்த பால் டேவிசன், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளரும் இந்திய அமெரிக்கருமான ரோஹன் சேத் இருவரும் இணைந்து கிளப் ஹவுஸ் செயலியை உருவாக்கியுள்ளனர்.
இந்த செயலிகளை பலர் நல்லவிசயங்களுக்கு பயன்படுத்தும்வேளையில், மற்றும் பலர் தவறான வழிகளில் பயன்படுத்துவதாகவும் சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது 3.8 பில்லியன் பயனாளர்களில் தொலைபேசி விவரங்கள் டார்க் நெட் இணையதளத்தில் விற்பனையாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான தகவலை முன்னணி இணைய பாதுகாப்பு நிபுணர் ஜிதன் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கிளப்ஹவுஸ் பயனர்களின் தொலைபேசியில் உள்ளவர்களின் ஃபோன் நம்பர்களும் இதில் உள்ளது. நீங்கள் கிளப்ஹவுஸில் உள்நுழைவு இல்லாவிட்டாலும் நீங்கள் பட்டியலிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் கிளப்ஹவுஸ் நிர்வாகம் இதனை மறுத்துள்ளது. இந்த சமபவம் கிளப்ஹவுஸ் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.