தமிழ்நாடு

கொசுக்களை அழிக்கவும் வந்தாச்சு ட்ரோன்கள்; கொரோனாவுடன் டெங்குவை ஒழிக்கும் பணியிலும் தி.மு.க அரசு தீவிரம்!

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வை தமிழக ஏற்படுத்தி வருகிறது.

கொசுக்களை அழிக்கவும் வந்தாச்சு ட்ரோன்கள்; கொரோனாவுடன் டெங்குவை ஒழிக்கும் பணியிலும் தி.மு.க அரசு தீவிரம்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் `ஏடிஸ்' கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதற்காக தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து வீடுகள், பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் டெங்குக் காய்ச்சலைத் தடுக்கலாம். ஒருபுறம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வந்தாலும் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை மூலம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

கொசுக்களை அழிக்கவும் வந்தாச்சு ட்ரோன்கள்; கொரோனாவுடன் டெங்குவை ஒழிக்கும் பணியிலும் தி.மு.க அரசு தீவிரம்!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாதவாறு பழைய பொருட்களை அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. தீவிர தூய்மை பணி மற்றும் நீர்நிலைகளில் கொசுக்களை ட்ரோன்களை பயன்படுத்தி கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை அளித்தால் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பிற சுகாதார அதிகாரிகள் கலைஞர் செய்திகளுக்கு பேட்டியளித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories