தமிழ்நாடு

SC/ST வகுப்பினருக்கு மானிய விலையில் வாகனங்களை வழங்கிய அமைச்சர்... சொன்னதை செய்துகாட்டும் தி.மு.க அரசு!

தாட்கோ திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு 30% மானிய விலையில் ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

SC/ST வகுப்பினருக்கு மானிய விலையில் வாகனங்களை வழங்கிய அமைச்சர்... சொன்னதை செய்துகாட்டும் தி.மு.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தாட்கோ திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு 30% மானிய விலையில் ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஆதிதிராவிடர் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

தாட்கோ திட்டத்தின் கீழ் மானிய விலையில் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆதிதிராவிடர் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த SC/ST வகுப்பினர் 10க்கும் மேற்பட்டோருக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. திட்டத்தின் படி வாகன விலையில் 30% அரசு மானியமாகவும், 65% குறைந்த வட்டியில் கடனாகவும் வழங்கப்படுகிறது.

5% வாகன விலையை மட்டுமே பயனாளர் செலுத்த வேண்டியுள்ளதால் பலர் ஆர்வமுடன் பதிவு செய்து வருவதாக ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறையின் மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

banner

Related Stories

Related Stories