தமிழ்நாடு

செயற்கை பண்ணைக்குட்டை மூலம் விவசாயத்தில் சாதிக்கும் உசிலம்பட்டி சகோதரர்கள்... குவியும் பாராட்டு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசு வெட்டிக்கொடுத்த பண்ணைக்குட்டையில் தண்ணீரைத் தேக்கி விவசாயம் செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர் உசிலம்பட்டி சகோதரர்கள்.

செயற்கை பண்ணைக்குட்டை மூலம் விவசாயத்தில் சாதிக்கும் உசிலம்பட்டி சகோதரர்கள்... குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை மாட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த விவசாயி காந்தி- லெட்சுமி ஆகியோரின் மகன்கள் ஞானப்பிரகாசம், வினோத்குமார். இவர்கள் ஆழ்த்துளைக் கிணறு மூலம் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

போதிய பருவமழை இல்லாமை மற்றும் காலநிலை மாற்றத்தால் கிணற்றில் தண்ணீர் வற்றியது. இதனையடுத்து அரசு ஏற்பாட்டின் பேரில், ரூ.1 லட்சம் மதிப்பில் 20 சென்ட் பரப்பளவில் பண்ணைக்குட்டை வெட்டிக் கொடுக்கப்பட்டது. அதில் தண்ணீரைச் சேமித்து வைத்திருப்பதால் ஆழ்துளைக் கிணற்றிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால் பண்ணைக்குட்டை பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் வாழை, தென்னை, கொய்யா, கத்தரி, தக்காளி, கீரை வகைகள் என ஒரு அடி இடத்தைக்கூட விடாமல் நடவு செய்துள்ளனர். மேலும் குட்டையில் கட்லா, ரோகு, கெண்டை, சில்வர் கிராப் ஆகிய மீன்களையும் வளர்த்து வந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளனர். சகோதரர்களின் முயற்சிக்கு அரசு உதவியதைத் தொடர்ந்து அவர்கள் விவசாயத்தில் சாதனை படைத்து வருவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories