முந்தைய அதிமுக ஆட்சியில் பயனாளிகளை தேர்வு செய்யாமல் புறம்போக்கு இடங்களில் குடிசை மாற்று வாரியம் சார்பாக குடியிருப்புகளை லாப நோக்கத்துடன் அதிமுக அரசு கட்டியுள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் தேனியில் பேட்டியளித்துள்ளார்.
தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று தேனி மாவட்டத்தில் சிட்கோ, அன்னஞ்சி விளக்கு பகுதி பெரியகுளம் சாலையில் உள்ள மூலதன மானியம் பெற்ற தனியார் நிறுவனங்கள், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் தப்புக்குண்டு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் அனைவருக்கும் வீடு திட்டத்தில் மானியத்துடன் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை 1.05 கோடி மதிப்புள்ள 50 பயணாளிகளுக்கு வழங்கினார். பின்னர் அப்பிப்பட்டி பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பாக 43 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்புகளையும் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஊரக தொழில்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் கூறுகையில் பயணாளிகளை தேர்வு செய்யாமல் புறம்போக்கு இடங்களில் குடிசை மாற்று வாரியம் சார்பாக குடியிருப்புகளை அதிமுக அரசு கட்டியுள்ளதாகவும் ஒரு சிலரின் ஆதாயத்திற்காகாவே குடிசை மாற்று வாரியம் சார்பாக குடியிருப்புகளை கட்டியுள்ளனர் என குற்றம்சாட்டினார்.
மேலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சென்னையில் உள்ள குடியிருப்புகளில் வாழ்வதற்கு தகுதியாக உள்ளனவா என்பது குறித்து ஓபிஎஸ் ஆய்வும் செய்யவில்லை பயன்பாட்டிற்கும் கொண்டுவரவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் தேவையற்ற இடங்களில் திட்டங்களை கொண்டு வந்து அரசுக்கு ₹2500 கோடி இழப்பை வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஏற்படுத்தியிருக்கிறார் எனக் கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசின் மானியங்கள் வழங்கப்படுகிறது.
இதில் பயனாளிகளின் பங்களிப்பு தொகைக்கு வங்கிகளின் மூலம் கடன் உதவியை தமிழக அரசே பெற்று தருகிறது என தெரிவித்தார். இந்நிகழ்வில். மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் சட்ட மன்ற உறுப்பினர் சரவணக்குமார், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, நகரச் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்