தமிழ்நாடு

“IIT-ல் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்புகள் முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது ஏன்?” : TR.பாலு MP கேள்வி!

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் டாக்டர் வி.ராம்கோபால் அறிக்கையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுமா? என டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

“IIT-ல் பிற்படுத்தப்பட்டோருக்கான  வாய்ப்புகள் முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது ஏன்?” : TR.பாலு MP கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் டாக்டர் வி.ராம்கோபால் அறிக்கையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுமா? என்று நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்ற கழக குழுத் தலைவருமான, டி.ஆர்.பாலு மக்களவையில், இந்திய தொழில் நுட்ப நிறுவனங்களில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான, டாக்டர் வி.ராம்கோபால் அவர்களின் அறிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டதா? என்றும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களிடம் விரிவான கேள்வி எழுப்பினார்.

டி.ஆர்.பாலு அவர்கள் மக்களவையில் எழுப்பிய கேள்வியின் விவரம் வருமாறு:-

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்புகள் மூன்று சதவீதம் அளவிற்கு மட்டுமே உள்ளதா? என்றும் ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்புகள் முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது ஏன்? என்றும், பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.

ஒன்றிய கல்வி நிறுவனங்கள் சட்டம், 2019-ன்படி இயக்குநர், இந்திய தொழில்நுட்ப நிறுவனம், டெல்லியின் தலைமையில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றும், நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையை ஆராய்ந்து வருவதாகவும், ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் அறிவிக்கைகளின்படி, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதாகவும், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகிய அனைத்து நிலைகளிலும் இடஒதுக்கீட்டு முறை, ஒன்றிய கல்வி நிறுவனங்கள் சட்டம், 2019-ன்படி நிறைவேற்றப்படுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர், டி.ஆர்.பாலு அவர்கள் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் ஒன்றிய கல்வி அமைச்சர் பதிலளித்தார்.

banner

Related Stories

Related Stories