கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழக எல்லை பகுதி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் ஜிகா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடுகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது.
அதன்படி, வழக்கமான பரிசோதனைகளான எலிசா பரிசோதனையைத் தொடர்ந்து பிசிஆர் பரிசோதனையிலும் ஜிகா வைரஸ் கண்டறிய தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு சுகாதாரத் துறை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்தியுள்ளது.
இதுவரை கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் 65 இடங்களில் சேகரிக்கப்பட்ட ஏ.டி.ஸ் கொசுக்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த மாதிரியிலும் ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கபடவில்லை என தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.