தமிழ்நாடு

"தூத்துக்குடியில் 2.90 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" : கனிமொழி எம்.பி பேட்டி!

தூத்துக்குடியில் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

"தூத்துக்குடியில் 2.90 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" : கனிமொழி எம்.பி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி செல்லும் நான்கு வழிச் சாலையில் வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றின் மேல் மேம்பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தப் பாலத்தை மக்களவை தி.மு.க குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பாலத்தை சீரமைக்கும் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் கேட்டறிந்தார். மேலும் பாலம் சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டுமென அதிகாரியிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர், தூத்துக்குடி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளை கனிமொழி எம்.பி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இந்தப் பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை கனிமொழி எம்.பி துவங்கி வைத்தார்.

பின்னர், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குமாரகோவில் ஊராட்சியில் உள்ள கூட்டாம்புளி கிராமத்தில் தூத்துக்குடி விமான நிலைய சமூக பொறுப்பு நிதியில் இருந்து சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் குப்பைகளை உரமாக்கும் மையத்தை கனிமொழி எம்.பி துவங்கி வைத்தார். பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விமான நிலைய குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி கலந்துகொண்டு விமான நிலைய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை உறுப்பினர் கனிமொழி, "தூத்துக்குடி விமான நிலையத்தில் பணியாற்றும் விமான நிலைய ஊழியர்கள் 180 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை குறைக்கும் விதமாக மாவட்டத்தின் அனைத்து துறைகளில் பணியாற்றுபவர்களுக்கும், அனைத்து பகுதி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. தூத்துக்குடியில் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு 2வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விமான நிலைய விரிவாக்க சுற்றுச்சுவர் கட்டும் பணி, இரவு நேரங்களில் விமானம் தரை இறங்குவதற்கு வல்லநாடு மலைப்பகுதியில் சமிக்ஞை டவர் அமைக்கும் பணி, விமான நிலைய ஓடுபாதை நீளம் அதிகப்படுத்துதல் ஆகிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும் விரைவில் நிறைவு பெறும்.

மேலும், வல்லநாடு பகுதியில் பாலத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே பாலம் கட்டுமானத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து இந்தப் பாலத்தை அமைத்தால் நிறுவனம் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள விரிசல்கள் விரைவில் சீர்செய்யப்படும்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories