தமிழ்நாடு

390 குடிசை குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய வீடு.. ஆய்வு பணியை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ!

மெட்வே மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச தடுப்பூசி முகாமை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

390 குடிசை குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய வீடு.. ஆய்வு பணியை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் சென்னை தொடக்கப்பள்ளி அருகே மெட்வே மருத்துவமனை சார்பாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தடுப்பூசி மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில், முகாமை துவக்கி வைத்து தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா கால உபகரணங்களை வழங்கினார். மெட்வே மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச தடுப்பூசி முகாமை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட நடுக்குப்பம் தெருவில் இலவச தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து, நடுக்குப்பம் பகுதியில் உள்ள மக்களிடம் வீடு, வீடாக சென்று பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் புதுப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியில் பாதாள சாக்கடையை ரோபோட் மூலம் சுத்தம் செய்யும் பணியை துவக்கி வைத்தார். அதனையடுத்து, புதுப்பேட்டையில் கூவம் ஆற்றின் ஓரம் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

புதுப்பேட்டையில் உள்ள இடியும் தருவாயில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை இடித்துவிட்டு அதே பகுதியில் புதிதாக கூடுதல் வசதிகளுடன் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை கட்டுவது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சர் தா.மோ .அன்பரசன், எம்.பி.தயாநிதி மாறன் ஆகியோருடன் இணைந்து சேப்பாக்கம் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

390 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு பதிலாக புதிதாக வீடுகள் கட்டுவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அவருக்கு விளக்கினர். சேப்பாக்கம் தொகுதி 62அ வட்டம், குருவப்பா தெருவில் கொரோனா தடுப்பூசி முகாமை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்து, கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

banner

Related Stories

Related Stories