தமிழ்நாடு

டயரில் எலுமிச்சை பழம் இருந்த கார் யாருடையது? சங்கிகளுக்கும், டயர் கட்சிக்கும் அம்பலப்படுத்திய செய்தியாளர்

முதலமைச்சர் மீது அவதூறு பரப்புவதாக நினைத்து தானாகவே சிக்கிக் கொண்ட சங்கிகளையும், டயர் கட்சியும் இணைய வாசிகள் கிண்டலடித்து வருகிறார்கள்.

டயரில் எலுமிச்சை பழம் இருந்த கார் யாருடையது? சங்கிகளுக்கும், டயர் கட்சிக்கும் அம்பலப்படுத்திய செய்தியாளர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, கூடுதலான தடுப்பூசியைத் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும், செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலைகளை உடனடியாகச் செயல்பட வைக்கவேண்டும்.

தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி ஆதாரங்களை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும், ஜி.எஸ்.டி வரி பாக்கி தொகையை முழுமையாகத் தமிழகத்துக்கு உடனடியாக வழங்க வேண்டும், நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்தே மக்களுக்கான பணிகளில் அதிரடி காட்டி வருகிறார். இது பிடிக்காத சங்கிகளும், டயர் கட்சியினரும் மற்றும் எதிர்க்கட்சிகளும் முதலமைச்சருக்கு எதிராகப் பொய்யான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

நேற்று கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பயன்படுத்திய காரின் டயருக்கடியில் எலுமிச்சைப்பழம் வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் பகுத்தறிவா என கூறி சங்கிகளும், டயர் கட்சியனரும் கேள்வி ஒன்றை பொய்யாக எழுப்பி, வழக்கம் போல் போலியான ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பினர்.

இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் இவர்களின் பொய்யை ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். இது குறித்து அந்த பத்திரிக்கையாளர் தனது ட்விட்டரில், முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பயன்படுத்திய காரின் டயருக்கடியில் எலுமிச்சம்பழம் வைக்கப்பட்டிருக்கிறது இதுதான் பகுத்தறிவா என கேள்வி எழுப்பி நிறைய பேர் இந்த புகைப்படத்தை பகிர்கின்றனர்

எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்திருந்தபோது எடுக்கப்பட்ட படம் இது. இதை எடுத்தது நான்தான். பின்னணியில் ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் இருப்பதை காண முடியும். கீழே உள்ள புகைப்படம் தான் நேற்றைய தினம் எடுத்தது. இதில் ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் இருக்காது" என ஆதாரங்களுடன் இவர்களின் கட்டுக்கதையை அம்பலப்படுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories