பா.ம.கவில் முக்கிய நிர்வாகியாக வளம் வந்தவர் காடுவெட்டி குரு. இவர் மறைந்த பிறகு பா.ம.கவுக்குள் பல்வேறு குழப்பங்கள் வெடித்து வருகிறது. மேலும் அண்மை காலமாக கட்சி நிர்வாகிகள் ஒருவர்மீத ஒருவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
சட்டமன்ற தேர்தலின் போதுகூட, பா.ம.கவில் நடிக்கறவங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நான் காட்சியிலிருந்து விலகுறேன் என வைத்தி தெரிவித்திருந்தார். இப்படியான செயல்கள் பா.ம.க தலைவர் ராமதாஸ் மீது முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதைக் காட்டுகிறது.
இதையடுத்து பா.ம.க தலைவர் ராமதாஸ், "அண்மைக்காலமாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு இயக்கங்களின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடம் போக்கு அதிகரித்துள்ளது. இதை அனுமதிக்க முடியாது. இத்தகைய ஒழுங்கீன செயல்களில் ஈடுபவடுவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்" என எச்சரிகை விடுத்திருந்தார். இவரின் இந்த அறிக்கை கட்சிக்குள் குழப்பம் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது.
இந்நிலையில், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய சொந்த கட்சிக்காரரே நிதி உதவி செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியர் சங்க மாநில துணை ம.க.ஸ்டாலினை கொலை செய்ய நான பேர் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை அறிந்த ம.க.ஸ்டாலின் கால்விலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இவரின் புகார் அடிப்படையில் போலிஸார் கொலை செய்ய திட்டமிட்டவர்கள் மற்றும் இவர்களுக்கு நிதியுதவி செய்த பா.ம.க மாநில நிர்வாகி வெங்கட்ராமன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொலை திட்டம் தீட்டிய நான்குபரை கைது செய்த போலிஸார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற் கொண்டு வருகிறார். மேலும், எதற்காகக் கொலை திட்டம் தீட்டப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் விசாரணைநடத்தப்பட்டு வருகிறது.