கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்ற கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழா நடைபெற்றதற்கு எதிரில் குடியிருக்கும் பெண்மணி ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பார்த்ததும் உணர்ச்சிப்பூர்வமாக ‘சி.எம். அண்ணா வாழ்க!’ -என்று வாழ்த்தொலி எழுப்பினார்.
தொடர்ந்து அப்பெண்மணி, “உங்கள் பணி கிரேட் அச்சூவ்மெண்ட்ண்ணா, நீங்க செய்கின்ற பணி சிறப்பா இருக்குண்ணா, நீங்க நல்லா இருக்கணும்; நீங்க மக்களுக்கு நல்லா செஞ்சிக்கிட்டுஇருக்கீங்கண்ணா, நீங்க தாண்ணா ‘ரியல் ஹீரோ’. இந்த உலகத்திலே நான் பார்த்தவரைக்கும்” என்று உரக்கக் குரல் கொடுத்து வாழ்த்தினார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அப்பெண்ணின் அருகில் வந்து; இரு கரங்களையும் கூப்பி வணங்கி, நன்றி தெரிவித்த காட்சி அங்கே குழுமியிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது. அந்தப் பெண் ‘உலகத்திலேயே நீங்கதாண்ணா ‘ரியல் ஹீரோ’ என்று சொன்னது வலைதளங்களில் அன்றைய தினம் டிரெண்டிங் ஆனது.
இதனைத் தொடர்ந்து, ‘சென்னை எக்ஸ்பிரஸ் டி.வி.’ என்ற இணையதள டி.வி. ஒன்று அப்பெண்மணியை நேரில் சென்று பேட்டி கண்டது. ‘சென்னை எக்ஸ்பிரஸ்டி.வி.’க்கு அப்பெண் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
“குறை எல்லோராலும் சொல்ல முடியும். ஆனால் ‘செயல்’ யாராலும் செய்யமுடியாது. நீங்க ஒரு செடிக்காக விதைபோடுறீங்க, போட்ட உடனே மரம் வளரும்ன்னு சொன்னா எப்படிங்க வளரும்? அதற்கு டைம் கொடுங்க. தப்பு இருந்தா சொல்லுங்க. ஆனா, காரணமே இல்லாமல், தப்புன்னு சொல்லக்கூடாது.
சி.எம்.அண்ணா அவர்கள் அடிக்கடி இங்கே வருவாங்க. முன்பு எப்படி பேசினாரோ, அதேமாதிரிதான் இப்போதும் பேசினார். இந்த விழா நடைபெறுகின்ற இடத்திற்கு எதிரில்தான் எங்கள் வீடு இருப்பதால், எங்களிடம் அடிக்கடி பேசுவார். நேற்று வரும்போது,‘அண்ணா... வாங்கண்ணா’ என்று கூப்பிட்டேன். அவர், திரும்பி பார்த்து, ‘சொல்லும்மா’ என்று சொன்னார். ‘அண்ணா, நீங்க மூன்று மாதத்திற்கு முன்பு என்ன சொன்னீங்களோ, அதனைத்தான் இப்போது செய்தீங்கண்ணா, செய்துக்கிட்டும் இருக்கீங்கண்ணா.. இந்தக் கொரோனா காலத்தில் ஒரு அசாதாரமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தக் காலத்தில் பணி செய்வது மிகவும் சேலஞ்சான விசயம்’ என்று பேசினேன்.
முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டு நல்ல செயல்களைச் செய்வார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மக்களுடைய சப்போர்ட்டும் எப்போதும் அவருக்கு உண்டு. இதனை கண்கூடா நேரிலே பார்க்கிறேன். அவர் எம்.எல்.ஏ.வா இருந்ததை விட இப்போ முதலமைச்சரா இருக்கிறபோது இன்னும் சுறுசுறுப்பா இருக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
சில பேர் சி.எம். ஆகிட்டாங்கன்னா அவங்களை போய் அப்ரோச் பண்ண முடியாது. ஆனா, இவரை எல்லோருமே போய் அப்ரோச் பண்ணலாம். இவர் எல்லோரிடமும் குறைகளைக் கேட்கிறார். அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிறார். நான் கட்சித் தொண்டர் அல்ல. சாதாரண குடிமகள்தான்! நான் இதனை முகஸ்துதிக்காக சொல்லவில்லை.” இவ்வாறு அப்பெண்மணி தெரிவித்துள்ளார்.