தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திகொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

“தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இல்லத்தில் தனியார் அமைப்பு சார்பில் சுகாதாரத் துறைக்கு ஆக்சிசஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது..

கொரோனா நோய்க்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற அடிப்படையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பொதுமக்கள் அதிகப்படியான தடுப்பூசிகளை தற்பொழுது செலுத்தி கொண்டு வருகின்றனர். விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். பொது மக்கள் முண்டியடித்துக் கொண்டு கூட்டமாகக் கூடி தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தடுப்பூசி தட்டுப்பாட்டை பூர்த்தி செய்து வருகின்றனர்.

தற்பொழுது தமிழகத்தில் 1300க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து வருகின்றனர்.  இதற்கான மாற்று மருந்து அதிதீவிரமாக உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ரெமிடெசிவர் கள்ளச் சந்தையில் விற்பவர்கள் கடுமையாக சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் பொழுது கடுமையான கட்டுப்பாட்டுகள் விதித்தும் மதுக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது தொற்று மிகுதியாக குறைந்ததன் பின்பே மதுக்கடைகள் திறக்கப்பட இருக்கிறது.

இதுவரை ஒரு கோடியே 30 லட்சத்து 30,594 தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 26 ஆயிரத்து  573 நபர்களுக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பேரிடர் காலத்தில் மருந்துகளுக்கு வரி குறைக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக அரசால் வலியுறுத்தபட்டது. மேலும் பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது குறித்து பேசவுள்ளார்.

banner

Related Stories

Related Stories