தமிழ்நாடு

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்.. தமிழில் அர்ச்சனை: அரசின் அறிவிப்புக்கு ஆர்.நல்லகண்ணு பாராட்டு!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பு வரவேற்கத்தகக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பாராட்டியுள்ளார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்.. தமிழில் அர்ச்சனை: அரசின் அறிவிப்புக்கு ஆர்.நல்லகண்ணு பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில பொதுச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் அடுத்த நூறு நாட்களில் நிறைவேற்றப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தகையை சிறப்பான நிலைபாடுகளையும் அறிவிப்புகளையும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலக்குழு வரவேற்கிறது.

பகுத்தறிவுக்கும் சமூக அறிவியலுக்கும் புறம்பானவற்றை தனது வாழ்வின் நிறைவு காலம் வரை சமரசமின்றி எதிர்த்துப் போராடியவர் தந்தை பெரியார். பிறப்பால் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்து குறிப்பிட்ட மக்களை ஆலயங்களுக்குள் அனுமதிக்காத சமூக அநீதிகளுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியவர்.

தமிழ்நாட்டில் பெரியார் வழி நின்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கலைஞர் கொண்டு வந்த சட்டங்களுக்கு ஏராளமான மேலாதிக்க இடர்கள். தற்போது கலைஞர் வழி நின்று இந்து அற நிலையத்துறை அமைச்சர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை அடுத்த நூறு நாட்களில் நிறைவேற்றப்படும் என்று அறிவித் திருப்பதும், தமிழில் அர்ச்சனை நடத்தப்படும் என்று அறிவித்திருப்பதும் மிகுந்த பாராட்டுதற்குரியது” இவ்வாறு அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories