தஞ்சாவூர் மாவட்ட ம் திருவையாறு அருகில் உள்ள பொன்னாவரை கிராமத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் பாதிப்படைந்து வந்த நிலையில் கிராம மக்கள் மனுக்கள் மூலம் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தெரியப்படுத்தினர்.
அதனையடுத்து மின்சாரத் துறையின் சார்பாக அப்பகுதியில் சுமார் 5.5 லட்சம் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தஞ்சை மாவட்ட மின்வாரிய துறை செயற்பொறியாளர் சேகர், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், திருவையாறு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அரசாபகரன், தாசில்தார் நெடுஞ்செழியன் ஆகியோர் இடத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், சாலை அருகில் குளம் இருப்பதால் அவற்றில் டிரான்ஸ்பார்மர் அமைக்கும்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு ஏற்பாடுகளை செய்துவிட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதனை அடுத்து அவ்வாறு அமைக்கப்படும் என செயற்பொறியாளர் உறுதி அளித்தார். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் கிராமத்திற்கு நீண்ட நாள் கோரிக்கையான மின்சார பற்றாக்குறையை போக்கும் வகையில் இன்று அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு சென்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்கள்.