தமிழ்நாடு

“பள்ளி வளாகத்தில் மனித எலும்பு கூடுகள் கண்டெடுப்பு” : நரபலி கொலையா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஐந்திற்கும் மேற்பட்ட மனிதனின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பள்ளி வளாகத்தில் மனித எலும்பு
கூடுகள் கண்டெடுப்பு” : 
நரபலி கொலையா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட மனித உடல், கால், கை, உடல் தலை உள்ளிட்ட மனிதனின் பல்வேறு உடல் உறுப்பு பாகங்களுடன் எலும்புக்கூடுகள் மணலில் புதைந்துள்ளதை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாலிநோக்கம் போலிஸார் கடலாடி தாசில்தார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, இந்த எலும்புகூடுகள் பள்ளி மாணவர்களா அல்லது வேறு நபர்களா அல்லது நரபலி செய்யப்பட்டுள்ளவர்களா அல்லது கொலை செய்யப்பட்டு உள்ளதா என்ற பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

வாலிநோக்கம் கிராமத்தில் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கூலித்தொழிலாளர்கள் மீன்பிடி தொழில் சார்ந்த நபர்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் புயல் காரணமாக கடந்த 3 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் சூறைக் காற்று வீசி வருகிறது .

இதனால் பள்ளியின் வளாகத்தில் புதைக்கப்பட்ட எலும்பு கூடுகள் வெளியே தெரிந்தது. இதையடுத்து அப்பகுதியினர் போலிஸாருக்கும், வருவாய் துறை அதிகாரிளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வாலிநோக்கம் போலிஸார், கடலாடி தாசில்தார் சேகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories