இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தொற்று பாதித்த சிலர் கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், மத்தியப்பிரதேசம், உத்தரகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, பீகார் போன்ற மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் பலர் கருப்பு பூஞ்சை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த நோய் பாதித்தவர்கள் சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்த நோய் கொரோனா தொற்றாலர்களை தாக்குவதற்குக் காரணம் அதிகமாக ஸ்டீராய்டு எடுத்துக்கொள்வதால் அவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த நோய் தாக்கியுள்ளதால், தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோயை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.