தமிழ்நாடு

“யாருமே உதவ முன்வராத நிலையில் உதவிய இளம்பெண்” - நெகிழ்ந்துபோய் பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, மூதாட்டிக்கு உதவ யாரும் முன்வராத நிலையில், உதவிய இளம்பெண்ணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

“யாருமே உதவ முன்வராத நிலையில் உதவிய இளம்பெண்” - நெகிழ்ந்துபோய் பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் மூதாட்டி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அவரை அவருடைய மகன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, மூச்சுத்திணறல் காரணமாக அவர் வழியிலேயே மயங்கி விழுந்தார்.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, அவருக்கு உதவி புரிய யாருமே முன்வரவில்லை. இந்நிலையில், சேலம் காட்டூர் பகுதியைச் சார்ந்த இளையராணி என்ற இளம்பெண் அந்த மூதாட்டியை தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றார்.

பின்னர், இருசக்கர வாகனத்தில் அவரை அமர வைத்து கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். யாரும் உதவ முன்வராத நிலையில் உதவிய இளம்பெண்ணை பலரும் பாராட்டினர்.

இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ந்து அந்த இளம்பெண்ணை பாராட்டியிருக்கிறார். இன்று சேலம் மாவட்டத்திற்கு கொரோனா தொற்று பரவல் ஆய்வுக்காக சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூதாட்டிக்கு உதவி புரிந்த இளம்பெண்ணை சேலம் விமான நிலையத்திற்கு வரவழைத்து அவருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு கொரோனா அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன். இன்று சேலம் சென்றிருந்த போது இளையராணியை சந்தித்து மனமார பாராட்டினேன். இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறது!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories