தமிழ்நாடு

“நீட்.. 7 பேர் விடுதலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்”: அமைச்சர் ரகுபதி பேச்சு

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் கலந்தாலோசித்து நல்ல முடிவை தமிழக மாணவர்களுக்கு தருவார் என தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

“நீட்.. 7 பேர் விடுதலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்”: அமைச்சர் ரகுபதி பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு மற்றும் ஆக்சிஜன் பிளாண்ட்களை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அமைச்சர் ரகுபதி நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் கொரோனா நோயாளிகளுக்கு நாளை மாலை வரை தேவையான ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது.

வரக்கூடிய நாட்களில் ஆக்சன் தேவை அதிகமாக இருப்பதால், ஆக்சன் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது. கேட்கப்பட்டுள்ள ஆக்சிஜன் நாளை நிச்சயம் கிடைக்கப் பெறும். வெளி மாவட்டத்தில் இருந்தும் தனியார் மருத்துவமனையில் இருந்தும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வருகின்றனர்.

அதனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய் தொற்றின் ஆரம்ப கட்டத்தில் வருகை தராமல் முற்றிய நிலையில் பொதுமக்கள் வருவதால் அவர்களை காப்பாற்றுவது சவாலாக உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தான் கொரோனா‌ இரண்டாவது அலையிலிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

“நீட்.. 7 பேர் விடுதலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்”: அமைச்சர் ரகுபதி பேச்சு

கொரோனாவில் இருந்து மீள தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றது. போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணி அமர்த்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். 7 தமிழர் விடுதலையில் பழைய அரசு ஆளுநருக்கு தீர்மானம் போட்டு அனுப்பி வைத்தது. அது ஆளுநரிடம் கிடப்பில் உள்ளது.

இதுகுறித்து பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு போட்டுள்ளார். அதில் தனக்கு பரோல் வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு சிபிஐ ஆட்சேபனை தெரிவிக்கவில்லை, இந்நிலையில் ஆளுநர் கோப்பின் மீது முடிவெடுக்காமல் முக்கிய பிரச்சனை என்பதால் இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். அதனால் தற்போது முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு குடியரசுத் தலைவரிடம் உள்ளது.

இருந்தாலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒட்டுமொத்த மக்களின் கருத்துக்கு இடமளிக்கும் வகையில் சிறப்பான தீர்வை எட்டி இதற்கான விடையை காண்பார்.நீட் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை தமிழக மாணவர்களுக்கு தருவார்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories